Videos with tag கடாபி
Results 1-1 of 1
 
01:00
01:00
01:00

கடாபி புரட்சி படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடந்த 69ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 42 ஆண்டுகள் வரையில் லிபியாவின் அதிபராக பதவிவகித்த கடாபி நேற்று புரட்சி படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். பதுங்கு குழியில் பதுங்கி இருந்த அவரை உயிருடன் பிடித்த கிளர்ச்சியாளர்கள் பின்னர் கொடூரமாக கொலை செய்ததாக தெரிகிறது. இதற்கு ஆதாரமாக சில வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிபர் பதவி விலக கோரி கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. உள்நாட்டில் புரட்சி படைகள் தவிர நேச நாடுகளும் அதிபர் பதவியை விட்டு கடாபி விலகும் படி கோரிக்கை விடுத்து வந்தன. கோரிக்கைகளை ஏற்க மறுத்த கடாபி தன்னை எதிர்த்தவர்களை சுட்டுக்கொள்ளும்படி ராணுவத்தினருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ராணுவத்தினருக்கும், புரட்சி படையினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. புரட்சி படையினருக்கு ஆதரவாக நேசப்படையினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கடாபி ஆதரவு படையினர் தலைநகர் டிரிபோலி உட்பட பல்வேறு முக்கிய நகரங்களை பறிகொடுத்தனர். தொடர்ந்து நடைபெற்று வந்த தாக்குதல்களில் கடாபியின் மகன் மற்றும் கடாபியின் நெருக்கமானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடாபி தன்னுடைய சொந்த ஊரில் தங்கியிருப்பதாக நேசபடைகளுக்கு தகவல்கிடைத்தது. இதனடிப்படையில் சிர்டி நகரில் தாக்குதல் நடத்திய நேசபடையினரின் ஒரு பகுதியினர் கடாபியை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நகரின் சாக்கடை குழாய் ஒன்றில் கடாபி பதுங்கியிருப்தை கண்டறிந்தனர். தொடர்ந்து அவர் சாக்கடை குழாயிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் காக்கி உடை அணிந்திருந்தார். புரட்சி படையினர் அவரை சாக்கடை குழாயில் இருந்து வெளியே அழைத்து வந்த போது சரண் அடைந்து விடுவதாகவும் சுட்டுக் கொல்ல வேண்டாம் என கெஞ்சுவதும் வீடியோவில் பதிவானது. கடாபியின் வேண்டுகோளை ஏற்க மறுத்த புரட்சிக்காரர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் நிலை குலைந்த அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. கடாபி பிடிபட்டபோது அவருடைய இடது தலைப்புறத்தில் காயம் இருந்ததும் அதிலிருந்து ரத்தம் வழிவதும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது. அவர் நடந்து செல்லும் அளவுக்கு இருந்ததாகவும் வீடியோ காட்சிகள் கூறுகின்றன. அப்படி இருக்கையில் அவர் எப்படி இறந்தார்? அவர் பிடிபட்டதும் தப்பி ஓட முயன்றாரா? அல்லது கிளர்ச்சியாளர்கள் அவரைச் சுட்டுக் கொன்றனரா? அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கடாபியின் தலையில் குண்டு காயம் இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் அந்த காயத்தால் தான் அவர் மரணம் அடைந்தாரா அல்லது அவரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்த பிறகு, தலையில் சுடப்பட்டாரா என்பது தெளிவாகவில்லை. அதிபர் கடாபியை உயிருடன் பிடிபட்ட போது அவருடன் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர் என்றும், அதுமட்டுமல்லாமல் அவருக்கு நெருக்கமானவர்களும் உடன் இருந்தனர் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி இருப்பதால் அவருடன் இருந்தவர்கள் குறித்து குழப்ப நிலை நீடித்து வருகிறது. மேலும் கடாபியுடன் அவரது ஆலோசகர் அகமது இப்ராஹிம் உடனிருந்ததாக புரட்சிபடையினர் தெரிவித்துள்ளனர். மேலும் முன்னாள் ராணுவ அமைச்சர் அபு பக்கர் யூனிஸ் கடாபி பதுங்கியிருந்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Channels: News  Military & War 

Added: 213 days ago by senthur

Views: 200 | Comments: 0

Not yet rated